web log free
April 30, 2025

பிரபல எம்பியின் மகனது கழுத்தில் கத்தி வைத்து தங்கம் மற்றும் பணம் கொள்ளை

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் மகன் சட்டத்தரணி கவின் ஜயசேகர பம்பலப்பிட்டி பகுதியில் காரில் தனது காதலியுடன் பேசிக் கொண்டிருந்த போது சைக்கிளில் வந்த ஒருவர் பாராளுமன்ற உறுப்பினரின் மகனை கழுத்தில் கத்தியை காட்டி மிரட்டி 1,60,000 பெறுமதியான தங்க நகை மற்றும் 3000 ரூபா பணத்தை திருடியுள்ளார்.  

சந்தேகநபர் முதலில் பணம் கேட்டதாகவும், தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியதையடுத்து, இடுப்பிலிருந்த கத்தியை இழுத்து எம்.பி.யின் மகனின் கழுத்தில் வைத்து மிரட்டியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் காரின் டேஷ்போர்டில் இருந்த பணப்பை, தங்க நகை மற்றும் 3000 ரூபாயை திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கண்காணிப்பு கேமரா மூலம் கொள்ளையில் ஈடுபட்டவரை பொலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd