web log free
May 06, 2025

​பொலிஸ் மா அதிபருக்கு பதவி நீடிப்பு

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு 3 மாத காலத்திற்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, விக்கிரமரத்ன நாளை (9) அல்லது நாளை மறுதினம் (10) பணிக்கு சமூகமளிக்க உள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொலிஸ் மா அதிபராக இருந்த விக்ரமரத்ன மார்ச் மாதம் 25ஆம் திகதி ஓய்வுபெறவிருந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூன்று மாத காலத்திற்கு அவரின் சேவையை நீடித்தார்.

இந்த சேவை நீட்டிப்பு ஜூன் 25ம் தேதியுடன் முடிவடைந்தது. 

பொலிஸ் மா அதிபர் ஒருவர் ஓய்வுபெறும் போது அவருக்கு பொலிஸ் அணிவகுப்பு நடத்தப்படுவதாகவும், ஆனால் சேவை நீடிப்பு நாளில் அவருக்கான அணிவகுப்பு இடம்பெறவில்லை எனவும் பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

விக்கிரமரத்ன 2020 இல் பொலிஸ் மா அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd