web log free
September 10, 2025

"உள்ளே சென்றபோது தேரரும் இரண்டு பெண்களும் நிர்வாணமாக இருந்தனர்!"

நவகமுவ, பொமிரிய ரஸ்ஸபான பிரதேசத்தில் வீடொன்றில் வைத்து பிக்கு ஒருவரையும் இரண்டு பெண்களையும் தாக்கிய முறைப்பாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தமது உறவினர் மற்றும் அவரது மகளுடன் வீட்டினுள் இருந்த போது இளைஞர்கள் குழுவொன்று வீட்டுக்குள் பலவந்தமாக நுழைந்து, தன்னையும் ஏனைய இருவரையும் தாக்கி வீட்டுப் பொருட்களை சேதப்படுத்தியதாக தேரர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக நவகமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

பணத்திற்காக அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு பெண்களுடன் அறையில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தாங்கள் அந்த வீட்டுக்குச் சென்றதாகவும், அப்போது தேரர் அந்த இரு பெண்களுடன் நிர்வாணமாக அறையில் இருந்ததாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர்.

அப்போது வாக்குவாதம் மற்றும் தாக்குதலும் ஏற்பட்டதாகவும் சந்தேக நபர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட முறைப்பாட்டை தேரர் வாபஸ் பெற்று சமரசம் செய்ய சம்மதம் தெரிவித்ததால், தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd