ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக எதிர்வரும் ஜூலை மாதம் 21 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளார்.
அங்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரதானி சாகல ரத்நாயக்க ஆகியோரும் ஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் இணைந்து கொள்ள உள்ளனர்.
இந்த விஜயத்தின் போது பல துறைகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் இருதரப்பு கலந்துரையாடல்களும் இடம்பெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
மேலும், ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும்.