web log free
February 04, 2026

கனேடிய பெண்ணுக்கு இலங்கையில் பாலியல் தொந்தரவு

எல்ல பிரதேசத்திலுள்ள மசாஜ் நிலையமொன்றில் 58 வயதான கனேடிய பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படும் சிகிச்சையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

விடுமுறைக்காக இந்நாட்டுக்கு வந்துள்ள இந்த வெளிநாட்டுப் பெண் எல்ல பிரதேசத்திற்கு விஜயம் செய்த நிலையில் எல்ல-பசரா சாலையில் உள்ள மசாஜ் நிலையத்திற்கு சென்றார்.

அங்கு மசாஜ் செய்து கொண்டிருந்த போது சிகிச்சையாளர் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக எல்ல காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

தன்படி சந்தேக நபரை கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கையை காவல்துறையினர் ஆரம்பித்திருந்த நிலையிலேயே 34 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.  

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd