web log free
April 02, 2026

அனைத்து மத ஸ்தலங்களின் சொத்து விபரங்களை சேகரிக்க அரசாங்கம் முடிவு

நாடு முழுவதிலும் உள்ள மத ஸ்தலங்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அந்த மத  ஸ்தலங்களின் சொத்துக்கள் தொடர்பில் அரசாங்கத்திடம் சரியான தகவல்கள் இல்லாத காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

மத வழிபாட்டுத் தலங்களைப் பதிவு செய்யும் பணியுடன் இந்தத் தகவல் சேகரிப்பும் தொடங்கப்பட உள்ளது.

எதிர்காலத்தில், கிராம அதிகாரிகளின் எல்லைக்குள்  இருக்கக்கூடிய மத இடங்களுக்கான அளவுகோல்களை தயார் செய்ய அரசாங்கம் எதிர்பார்க்கிறது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd