மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) நாடு தேடும் மாற்று அணி அல்ல என்றும் மக்கள் அதனை தற்போது உணர்ந்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகத்தை கையாளும் அறிவும் திறமையும் ஜே.வி.பிக்கு இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொடையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்றில் உரையாற்றிய அவர், ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க 75 வருட கால சாபத்தை நாட்டில் ஆட்சியில் ஈடுபடாதவர்கள் போல் கூறி வருவதாக கூறினார்.
"சந்திரிகா பண்டாரநாயக்கா அரசில் அநுரகுமார அமைச்சரவையில் பதவி வகித்தார். ஐந்தாண்டுகளுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன. ஆனால், பாதியிலேயே கைவிட்டனர். அநுரகுமார முகநூல் ஜனாதிபதி மட்டுமே. ஒரு தேநீர் கடை கூட நடத்த தெரியாத ஜே.வி.பி. எப்படி நாட்டை ஆளும்" என்று அவர் கேள்வி எழுப்பினார்.