web log free
June 13, 2026

தடுப்பூசி ஏற்றப்பட்ட நான்கு மாத குழந்தை திடீர் மரணம்!

தடுப்பூசி போடப்பட்ட நிலையில் சுகவீனமடைந்ததாக கூறப்படும் நான்கு மாத பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக குளியாபிட்டிய தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குளியாபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொமுவ பிரதேசத்தில் வசித்து வந்த டபிள்யூ.எஸ்.நிம்னாதி திஸாநாயக்க என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வாயில் இருந்து சளி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் காரணமாக குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்ததாக அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

கடந்த 15ஆம் திகதி ஹெட்டிபொல சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் சிறுமிக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை தடுப்பூசி போடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்ததுடன், மறுநாள் இந்த சுகவீனம் ஏற்பட்டதாக சிறுமியின் தந்தை தெரிவித்தார்.

இந்த சிறுமியின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாபிட்டிய தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd