இன்று (ஜூலை 25) கொழும்பு கோட்டையின் பல வீதிகளில் பல தொழிற்சங்கங்கள் பிரவேசிப்பதைத் தடுத்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி இல்லம், நிதியமைச்சு, இலங்கை மத்திய வங்கி, ஒல்காட் மாவத்தை, யோர்க் வீதி, வங்கி வீதி, லோட்டஸ் வீதி, சத்தம் வீதி போன்றவற்றிற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிப்பதைத் தடுப்பதுடன், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதையும் தடுக்கிறது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னிலை சோசலிச கட்சியின் தொழிலாளர் போராட்ட மையம், மக்கள் விடுதலை முன்னணி மற்றும் பல சுயாதீன தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு பேரணி தொடர்பில் கோட்டை பொலிஸார் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.