web log free
April 30, 2025

லிந்துலை லயன் குடியிருப்பில் தீ - 10 வீடுகள் எரிந்து நாசம்

லிந்துலை பெரிய ராணி வத்தை பகுதியில் தோட்டத்தொழிலாளர்கள் தொடர் குடியிருப்பில் ஏற்பட்ட தீப்பரலில் 10 வீடுகள் தீக்கிரையாகி 40 பேர் நிர்கதியாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
சம்பவம் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 475 யு கிராம சேவகர் பெரிய ராணிவத்தை இலக்கம் 01 தொடர் குடியிருப்பில் நேற்று இரவு (25) ஏற்பட்டுள்ளது.
 
பிரதேசவாசிகள் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்த போதிலும் தீ பரவல் காரணமாக 10 வீடுகள் வீடுகள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன.
 
எவருக்கும் உயிர் சேதங்களோ காயங்களோ ஏற்படாத போதிலும் அத்தியாவசிய ஆவணங்கள், உடுதுனிகள், தளபாடங்கள் உட்பட உடைமைகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
 
இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 40 பேர் தோட்டத்தில் உள்ள அம்மன் ஆலயத்திலும் கிருஸ்தவ தேவாலயத்திலும் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளன.
 
குறித்த தீ விபத்து மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிப்பதுடன் தீ விபத்துக்கான காரணத்தினையும் ஏற்பட்ட தீ சேத விபரங்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
 
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd