கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத டைனமைட் மீன்பிடி நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டவிரோத மீன்பிடியானது மீன்வளத்தை மட்டுமன்றி ஏனைய மீனவர்களையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதென கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இதனையடுத்து கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் கடற்படை மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் இப்பிரச்சினைக்கு தீர்வுகாண கலந்துரையாடப்பட்டது.
இந்த சட்டவிரோத முறைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்குமாறு கடற்படையினருக்கு பணிப்புரை விடுத்த ஆளுநர், மீனவர் சங்கங்கள் கடற்படையினருக்கு தகவல்களை வழங்குவதுடன் மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.