ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அழைப்பு விடுக்கப்பட்ட சர்வகட்சி மாநாடு தொடர்பில் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையில் சமகி ஜன பலவேகய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
வடக்கு கிழக்கு பிரச்சனை தொடர்பில் ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்ட சர்வகட்சி மாநாடு ஜனாதிபதியின் வழமையான அரசியல் செயற்பாட்டின் ஒரு அங்கமேயன்றி வேறொன்றுமில்லை என்பது மிகத்தெளிவாக வெளிப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு சூழலில் வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தீர்வை வழங்க முடியுமா என்பது சந்தேகமே என சமகி ஜன பலவேகவின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சிகளிடம் இருந்து பதில்களை ஜனாதிபதி கோருவதாகவும், அதற்கான பிரேரணையை அரசாங்கத்தினால் சமர்ப்பித்து பதில்களைப் பெற வேண்டுமெனவும் சமகி ஜன பலவேக கருத்து தெரிவித்துள்ளது.
அரசாங்கம் தனது முன்மொழிவுகளை முன்வைத்ததன் பின்னர் எதிர்க்கட்சிகள் தமது பொறுப்புக்களை நிறைவேற்றத் தயாராகவுள்ளதாக ஊடக அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.