web log free
May 23, 2026

கிராண்ட்பாஸ் மோதலில் ஒருவர் உயிரிழப்பு - இருவர் காயம்

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையிலான மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


நேற்று இரவு இடம்பெற்ற இந்த மோதலில் அதே பிரதேசத்தில் வசித்து வந்த 46 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களை கைதுசெய்ய கிராண்ட்பாஸ் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd