web log free
September 08, 2024

பாடசாலையில் ஆவி! வதந்தியா? உண்மையா?

பாதுக்கவில் உள்ள பாடசாலை ஒன்றில் உலவுவதாக கூறப்படும் ஆவி ஒரு மகளிர் விளையாட்டு அணியுடன் மாத்திரம் உலவுவதை உறுதிப்படுத்தும் சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளதாக தமது பிள்ளைகள் கூறுவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்தந்த விளையாட்டுக் குழுவினர் விளையாடுவதற்காக மைதானத்துக்குச் சென்றபோது, வகுப்பிலிருந்து மைதானத்துக்குச் சென்றவர்களை விட ஒருவர் அதிகமாகக் கணக்கிடப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

இதை யாரிடமாவது சொன்னாலும் நம்ப மாட்டோம் என பெற்றோர்களும் கூறுகின்றனர். ஆனால் இது நடந்துள்ளது என தங்கள் குழந்தைகள் கூறுகின்றனர்.

அந்த விளையாட்டுக் குழுவிற்குப் பொறுப்பான ஆசிரியையும் பல சந்தர்ப்பங்களில் பயந்து அலறித் துடித்துள்ளதாகவும், இதனால் அவரது பிள்ளைகள் கூட அச்சமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த ஆசிரியையின் வீட்டில் ஆவி தொடர்பில் தோவிலை நடத்தப்பட்டதாகவும், அதன் பின்னர் பாடசாலையில் ஆவியை பார்த்து பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலைமையால், பாடசாலையில் விரைவில் பிரித் ஓதுதல் நடத்தப்பட வேண்டும் என்ற ஆலோசனை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதிலும், பிள்ளைகளின் மனதை தெளிவடையச் செய்ய விஞ்ஞான ரீதியான கலந்துரையாடல்களை நடத்த வேண்டும் எனவும் பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட பாடசாலையின் பொறுப்பாளர்களிடம் கேட்டபோது, இது வதந்தி என்றும், தங்கள் பாடசாலையில் இதுபோன்ற சம்பவம் நடக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.