web log free
May 01, 2025

இன்று காலை கப்பம் கோரி கந்தானை பகுதியில் துப்பாக்கிச் சூடு

இன்று (04) காலை 6.10 மணியளவில் கந்தானை பியோ மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

T56 ரக துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த வீடு வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமானது எனவும், சந்தேகநபர்கள் அவரிடம் கப்பம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

டுபாயில் பதுங்கியிருக்கும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களான ஹீனடியன மஹேஷ், கந்தானே சூடிமல்லி மற்றும் கம்பஹா வருண ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd