இந்த வருடத்தின் (2023) முதல் நான்கு மாதங்களில் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை 7,386 மில்லியன் ரூபா மொத்த இலாபத்தைப் பதிவு செய்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
2022 செப்டெம்பர் மாதம் முதல் தண்ணீருக்கான புதிய கட்டண முறை அமுல்படுத்தப்பட்டதன் மூலம் 2023 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் நீர் வழங்கல் சபையின் வருமானம் 16,597 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
2022 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் நீர் வழங்கல் சபை 483 மில்லியன் ரூபா நட்டத்தை பதிவு செய்துள்ளது.
அந்த நட்டத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் இந்த காலப்பகுதியில் நீர் வழங்கல் சபை 2,778 மில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளது.
தண்ணீர் கட்டண உயர்வு காரணமாக இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் தண்ணீர் விற்பனை 196 மில்லியன் கன மீட்டர் குறைந்துள்ளது.
2022-ம் ஆண்டு இந்த காலகட்டத்தில் தண்ணீர் விற்பனை 210 மில்லியன் கனமீட்டராக இருந்தது.