ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் வழிகாட்டுதலின் கீழ் 16 நிபுணர்கள் தயாரித்த அறிக்கை கொழும்பு மாநகரில் 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் அன்றாட பாவனைக்காக பயன்படுத்தும் பெரும்பாலான உணவுப் பொருட்களை வீணடிப்பதாக தெரியவந்துள்ளது.
கொழும்பு நகரில் ஆறு இலட்சம் மக்கள் வசிக்கும் அதேவேளையில் நாளாந்தம் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியூர்களில் இருந்து கொழும்புக்கு வருவதாகவும் இந்த மக்கள் உட்கொள்ளும் பெரும்பாலான உணவுகள் வீணடிக்கப்படுவதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உணவுத் தட்டுப்பாடு மற்றும் எந்தவொரு உணவுப் பொருளும் கொழும்பை அடையும் தூரம் ஆகியவை உணவுப் பொருட்களின் விலை உயர்வை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை இந்த அறிக்கை காட்டுகிறது.
இந்த ஆய்வின்படி, கொழும்பு மாவட்டத்தில் உணவு வீணாக்கப்படுவது தேசிய அளவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வை எவ்வாறு பாதிக்கிறது என்பது விளக்கப்பட்டுள்ளது.