நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவைச் சுற்றி அமைச்சுப் பதவிகள் கிடைக்காத சிரேஷ்ட எம்.பி.க்கள் உட்பட மேலும் பல புதிய எம்.பி.க்களின் உதவியுடன் “எதிர்க்கட்சி” ஒன்றை உருவாக்கப் போவதாக மொட்டு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாமல் தலைமையில் இது தொடர்பான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அது எப்படியாவது வெற்றியடையும் பட்சத்தில், நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவதற்குள் நாமல் ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு உயர்த்துவது குறித்து இந்தக் குழு ஆலோசித்துள்ளது.
இந்த நாட்களில் எம்.பி.க்களை கூட்டிச் செல்லும் நடவடிக்கைகள் மிகவும் ரகசியமாக நடைபெற்று வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.