web log free
March 25, 2026

மனைவியுடன் சண்டை, துப்பாக்கியில் சுட்ட கணவன் தப்பியோட்டம்

பள்ளம - ரம்பத்தலவத்த, ஆடிகம பிரதேசத்தில் கணவன் ஒருவர் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த பெண் தற்போது நிகவெரட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ரம்பத்தலாவத்தை அடிகம பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பல்லம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd