நாரம்மல பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றின் மாணவிகள் 06 பேர் நச்சுப் பொருள் கலந்த நீரை அருந்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
குறித்த மாணவர்கள் நேற்று (14) வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக நாரம்மல பொலிஸார் தெரிவித்தனர்.
தரம் 10 இல் கல்வி கற்கும் 06 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவி ஒருவர் தன்னுடன் கோபமடைந்த பல மாணவர்களின் தண்ணீர் போத்தல்களில் களைக்கொல்லி மருந்துகளை கலந்து வைத்திருந்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அவ்வாறு விஷம் கலந்த மாணவியும் அதே தண்ணீரை குடித்ததாகவும், அவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், நாரம்மல பொலிஸாரிடம் நாம் வினவிய போது, இந்த மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.
குறித்த பாடசாலையில் மாணவர் தலைவர் பதவிக்கான போட்டியே இந்த சம்பவத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளதாக பாடசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.