web log free
September 10, 2025

பிக்கு கழுத்தில் கத்தி வைத்து விகாரையில் பணம் கொள்ளை

ஹசலக கந்தன்ஹேன ஸ்ரீ போதி மாலு விகாரைக்குள் இன்று (16) அதிகாலை முகமூடி அணிந்த மூவர் புகுந்து விகாரை பிக்குவை கத்தியைக் காட்டி மிரட்டி பணத்தை திருடிச் சென்றுள்ளதாக ஹசலக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் 119 அவசர அழைப்புப் பிரிவினர் வழங்கிய அறிவித்தலின் அடிப்படையில் ஹசலக்க பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று விகாரைக்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த விகாரையில் தேரர் மட்டுமே வசித்து வருவதாக பொலீசார் கூறுகின்றனர்.

Last modified on Wednesday, 16 August 2023 04:19
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd