இலங்கைக்கான கடன் திட்டத்தின் முதல் மீளாய்வுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணியாளர் குழுவொன்று அடுத்த மாதம் கொழும்புக்கு வரவுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் டொலர் கடனை மார்ச் மாதம் அனுமதித்தது.
முதல் ஆய்வு செப்டம்பர் 14 முதல் 27 வரை நடைபெறும்.
அதன் ஊழியர்கள் மற்றும் நிறைவேற்று சபையினால் முதல் ஆய்வு அங்கீகரிக்கப்பட்டால், 338 மில்லியன் டொலர் அடுத்தக் கட்ட கடன் இலங்கைக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.