web log free
November 26, 2024

பிரமுகர்களின் வாகனங்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆலோசனை

பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் வீதிகளை மூடுவதற்கு நடவடிக்கை
மேற்கொள்ள வேண்டாம் என பாதுகாப்புத் தரப்பினருக்கு ஜனாதிபதி ஆலோசனை
வழங்கியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் ஜனாதிபதி ஆலோசனை
வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிரமுகர்களின் வாகனங்கள் பயணிக்கும்போது வீதிகள் மூடப்படுகின்றமையினால்,
பொதுமக்களுக்கு அசௌகரியத்துக்கு உள்ளாகின்றனர்.

இதனை கருத்திற்கொண்டு ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளதுடன், இது
குறித்து பிரமுகர்களின் பாதுகாப்பு பிரிவினருக்கு ஆலோசனை வழங்குமாறு
உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd