web log free
February 08, 2026

20 கோடிக்கு தலைவர் பதவி!!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் பதவியை இருநூறு இலட்சம் ரூபாவிற்கு தன்னிடம் ஒருவர் பேரம் பேசியதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கூறுகிறார்.

தான் தலைவர் பதவியை பணத்திற்கு விற்க மாட்டேன் என்றும் அமைச்சர் கூறுகிறார்.

“வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பணத்திற்காக விற்கும் அமைப்பு அல்ல. இதை நாம் புதிய முறையில் உருவாக்க வேண்டும். குறைகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதிலும் வொய்ஸ் கட் ஆட்கள் இருக்கிறார்கள். அது என்னிடமும் வருகிறது. தெரியாத கனரக வண்டிகளில் சென்று சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள்” என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.  

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd