web log free
June 27, 2026

செம்பு தொழிற்சாலை ஊழியர்களுக்கு அழைப்பாணை

வெல்லம்பிட்டிய பிரதேசத்திலுள்ள செம்பு தொழிற்சாலை ஊழியர்கள் 08 பேரை எதிர்வரும்
27ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த நபர்களுக்கு இந்த
உத்தரவினை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம், இன்று பிறப்பித்துள்ளது.

ஏப்ரல் 21ஆம் திகதியானஉயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதலையடுத்து
வெல்லம்பிட்டிய பிரதேசத்திலுள்ள செம்பு தொழிற்சாலை ஊழியர்கள் சிலர் கைது
செய்யப்பட்டு அவர்களில் 08 பேர் பிணையில் வடுதலை செய்யப்பட்டது.

அத்துடன், அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டமை தொடர்பில் விசேட விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd