ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி ஆகியோர் தலா 10 பில்லியன் ரூபாவை தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்கவிற்கு வழங்குமாறு சட்டத்தரணி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
14 நாட்களுக்குள் அவ்வாறு செய்யாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் அநுர திஸாநாயக்க, மோல்டா மாநிலத்தில் பணத்தை முதலீடு செய்துள்ளதாக மக்கள் சந்திப்பொன்றில் தெரிவித்ததன் அடிப்படையில் இந்த அவதூறு இழப்பீடு கோரப்பட்டுள்ளது.