web log free
September 08, 2024

உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியிடும் காலம் அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதியில் அல்லது செப்டெம்பர் மாதம் முதல் சில தினங்களில் வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தயாரிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட இந்தத் பரீட்சை, ஜனவரி 23 முதல் பிப்ரவரி 17, 2023 வரை 2,200 பரீட்சை மையங்களில் நடைபெற்றது.

278,196 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 53,513 தனியார் விண்ணப்பதாரர்களும்  பரீட்சைக்கு தோற்றினர்.

ஆசிரியர்களின் தொழில்முறை நடவடிக்கைகளால் உயர்தர விடைத்தாள்களை சரிபார்ப்பதில் அவ்வப்போது தடங்கல் ஏற்பட்டதால் இந்த ஆண்டு நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சையை பரீட்சை திணைக்களம் ஒத்திவைத்தது.

உயர்தர மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய பின்னர் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பல்கலைக்கழக அனுமதி மற்றும் உயர்கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

எவ்வாறாயினும் பல இடையூறுகளுக்கு மத்தியில் மாணவர்களின் பெறுபேறுகளை ஆறு மாதங்களுக்குள் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை பரீட்சை திணைக்களம் மேற்கொண்டுள்ளது.