web log free
September 10, 2025

புதிய கூட்டணியை வழிநடத்தும் பொறுப்பு அநுரவிற்கு

புதிய கூட்டணியின் செயற்பாடுகளை வழிநடத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்கிழமை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற புதிய கூட்டணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா ஆகியோரின் முன்மொழிவுகளினால் இந்த நியமனம் உறுதிசெய்யப்பட்டதுடன் ஏனைய குழுவினரும் இணக்கம் தெரிவித்தனர்.

இதன்படி, புதிய கூட்டணியின் கட்சி விவகாரங்களை நிர்வகிப்பதற்கும் தீர்மானகரமான சக்திகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் பாராளுமன்ற உறுப்பினர் அனுர யாப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய கூட்டணியின் அறிமுக பேரணியை வரும் ஜனவரி மாதம் நடத்த ஆயத்தம் செய்யப்பட்டு தற்போது தொகுதி அளவில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd