web log free
April 06, 2026

ஞானசார தேரர் இன்று விடுதலை

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இன்று பிற்பகலில் சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்படலாம் என அவருக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு அளிக்கும் பத்திரத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டு நீதியமைச்சுக்கு அனுப்பியுள்ளதாக அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

நீதிமன்றத்தை அவமதித்தமை உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுகளில் ஞானசார தேரருக்கு 6 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd