நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் தற்போது 77 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவசர கொள்வனவின் கீழ் 400 வகையான மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டு, வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய கடன் திட்டங்களின் கீழ் பெறப்பட்ட 378 வகையான மருந்துகள் இதுவரை வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.
கடந்த வருடம் உலக வங்கியின் உதவியுடன் 23 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் 46.7 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.