web log free
May 17, 2024

மண்சரிவு எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதேவேளை, நிலவும் பலத்த மழையுடன் கூடிய வானிலையால் 05 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, களுத்துறை, காலி, கேகாலை மற்றும் கண்டி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய மற்றும் புலத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவிற்கும் கேகாலை மாவட்டத்தின் வரக்காபொல பிரதேச செயலாளர் பிரிவிற்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட, குருவிட்ட மற்றும் இரத்தினபுரி பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி மாவட்டத்தின் பத்தேகம, நாகொட, எல்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் கண்டி மாவட்டத்தின் உடபலாத்த பிரதேச செயலாளர் பிரிவிற்கும் களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட்ட, மத்துகம, பாலிந்தநுவர பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை, புலத்கொஹூபிட்டி, தெஹிஓவிட்ட, தெரணியகல, ருவன்வெல்ல மற்றும்

இரத்தினபுரி மாவட்டத்தின் கிரியெல்ல, கலவான, அயகம பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.