இன்று காலை இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளது.
அமைச்சர் ரிஷார்ட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் தொடர்பில் இன்றைய தினம் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும், அமைச்சர் ரிஷார்ட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஜூன் 18 ,19 திகதிகளில் நடத்துமாறு ஆளுங்கட்சி கூறியுள்ளது.
எனினும், ஜூன் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் நடத்துமாறு ஒன்றிணைந்த எதிரணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து, இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சர்ச்சை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.