நீர் மின் உற்பத்தி 20 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளில் சிறிதளவு மழை பெய்து நீர் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், மழையின் அளவைப் பொறுத்து நாளுக்கு நாள் நீர்மின் உற்பத்தி சதவீதம் மாறுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீர்த்தேக்கங்களின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இதுவரையில் கணிசமான மழை பெய்யவில்லை எனத் தெரிவித்த ரொஹான் செனவிரத்ன, கடந்த வாரம் 14 வீதமாக இருந்த நீர்மின் உற்பத்தியை உயர்த்துவது மிகவும் கவனமாகச் செய்ய வேண்டிய பணியாகும் என்றார்.
எதிர்வரும் நாட்களில் மழை பெய்யாவிட்டால் மீண்டும் உற்பத்தியை குறைக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.