யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் மணல் கடத்தல், கால்நடைகள் கடத்தல் மற்றும் ஏனைய குற்றச்செயல்களை 10 நாட்களுக்குள் கட்டுப்படுத்துமாறு பாதுகாப்பு தரப்பினரிடம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டார்.
யாழ். குடாநாட்டில் அண்மைய நாட்களாக இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் கடத்தல், கால்நடைகள் கடத்தல் உள்ளிட்ட ஏனைய சட்டவிரோத சம்பவங்கள் தொடர்பாக ஆராயும் விசேட
கூட்டமொன்று கடற்றொழில் அமைச்சர் தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று (150 நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போதே, அமைச்சர் இவ்வாறு கேட்டுக்கொண்டார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர், யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதியின் பிரதிநிதி, பிரதேச செயலாளர்கள், பொலிஸ் உயரதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களாகிய பலரும் கலந்துகொண்டனர்.