web log free
May 10, 2025

ஞானசார தேரர் விடுதலை

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவரை விடுதலை செய்வதற்கான அறிவித்தல் சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு கிடைத்த பின்னர், அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு அளிக்கும் பத்திரத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டு நீதியமைச்சுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்றத்தை அவமதித்தமை உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுகளில் ஞானசார தேரருக்கு 6 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கலகொட அத்தே ஞானசார தேரரை எதிர்பார்த்து சிறைச்சாலையின் பிரதான நுழைவாயிலில் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் குழுமியிருந்த நிலையில், அவர் வேறு வாயிலின் ஊடாக வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Last modified on Thursday, 23 May 2019 12:38
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd