ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசேட குழுக் கூட்டம் நாளை மாலை 3 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நாடாளுமன்றக் கட்டடத்தின் குழு எண் ஒன்றில் இடம்பெறவுள்ளது.
அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படவுள்ள மக்களை பாதிப்படையச் செய்யும் வகையிலான வேலைத்திட்டங்களுக்கு எதிராக, நாடாளுமன்றத்தை செயற்படுத்தல், எதிர்கட்சி உரிமையைப் பெற்றுக்கொள்வது குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் குழு கூட்டத்தில் அனைவரும் கட்டாயமாகக் கலந்துக்கொள்ள வேண்டுமென எதிர்கட்சியின் பிரதான அமைப்பின் அலுவலகம் ஊடாக எதிர்க்கட்சியின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இவ்வருடத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வுகள் நாளை மறுதினம் 08 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.