மேலும் மூன்று வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன் பிரகாரம் அமைச்சர் ரொஷான் ரணசிங்க பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் பொன்சேகா மற்றும் சரத் வீரசேகர ஆகியோருடன் போட்டியிடவுள்ளார்.
ஊழலை ஒழிப்போம் என்ற தொனிப்பொருளில் சிறிய கட்சியொன்றில் இருந்து சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக நாட்டில் இருந்து வெளியாகும் தேசிய பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது.
அதற்காக அவர் ஏற்கனவே உள்ளூர் மட்டத்தில் பொதுமக்களிடம் உரையாற்றி வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் அவர் சமகி ஜன பலவேக தவிசாளர் பதவியை ராஜினாமா செய்யவில்லை.
தேசிய சக்திகளை அடிப்படையாகக் கொண்ட அமைப்பின் ஊடாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு சரத் வீரசேகர செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் மாகாண ஆளுநர்கள் மற்றும் முன்னாள் சிரேஷ்ட பாதுகாப்புத் தலைவர்கள் பலர் வீரசேகரவின் அரசியல் திட்டத்தில் அவருக்கு ஆதரவளிப்பதாக அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க தற்போது உள்ளூரிலேயே மக்களைப் பயிற்றுவித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.