எரிவாயுவின் விலை அதிகரிப்பு காரணமாக கொத்து, சோறு மற்றும் தேநீர் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு தேநீர் விலை 10 ரூபாவினாலும், கொத்து ஒன்றின் விலை 20 ரூபாவினாலும், சோறு பார்சல் ஒன்றின் விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சங்கம் மேலும் குறிப்பிடுகிறது.
எவ்வாறாயினும், எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், வழமையாக உட்கொள்ளும் உணவின் விலையை அதிகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அவ்வாறான விலைகளை கட்டுப்படுத்த அரசாங்கம் செயற்பட வேண்டும் எனவும் தேசிய நுகர்வோர் முன்னணியின் உறுப்பினர் அசேல சம்பத் தெரிவித்தார்.