web log free
May 08, 2025

சஜித்துக்கு எதிராக சரத் பொன்சேகா கருத்து

தாம் நம்பும் அரசியல் நீரோட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி நகரவில்லை எனவும், மக்கள் நிராகரித்த பாரம்பரிய அரசியல் கலாசாரத்தில் தான் பயணிப்பதாகவும்  நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஒரு பாரம்பரிய அரசியல்வாதி எனவும், அவர் மாற்றத்தை விரும்பாதவர் எனவும், அவரிடமிருந்து நாடு வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தமது கட்சியில் உள்ள சில பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி செல்லும் தவறான பாதையை அறிந்தும் தமது கருத்தை வெளியிட அஞ்சுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தம்மை வேட்பாளராக நியமித்தால், தனது கட்சியையும் நாட்டையும் வெற்றியடையச் செய்யத் தயார் எனவும், தற்போதுள்ள அரசியல் அமைப்புகளை கவிழ்த்து தாம் சர்வாதிகாரி ஆவதற்குத் தயார் எனவும் இணையத்தளமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் பொன்சேகா தெரிவித்தார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd