web log free
February 09, 2026

இன்றைய இரவு காலநிலை குறித்து வெளிவந்த அறிக்கை

நாட்டின் பல இடங்களில் இன்று (11) மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன்  பலத்த மின்னலுக்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இன்று பிற்பகல் 1.00 மணி முதல் இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் பதுளை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையின் போது மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd