உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நாடாளுடன்ற
தெரிவுக்குழு நேற்று நியமிக்கப்பட்டது.
பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் 8 பேர்
அங்கம் வகிக்கின்றனர்.
அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான
எம்.ஏ.சுமந்திரன், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஜயம்பதி விக்ரமரட்ன, ஆஷு மாரசிங்க,
காவிந்த ஜயவர்தன ஆகியோர் இந்தக் குழுவில் அங்கத்தவர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இருந்து
விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்
காவிந்த ஜயவர்தன அறிவித்துள்ளார்.