ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் கண் வைத்தியர் டாக்டர் ஹிரண்யா குணசேகரவின் கூற்றுபடி இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களில் கிட்டத்தட்ட 15 வீதமானோர் பார்வைக் குறைபாடுகளைக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கிறார்.
உலகப் பார்வை தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு ஏற்படும் கண் நோய்கள் குறித்து பெற்றோர்கள், பெரியவர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்களுக்குக் கற்பிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நிபுணத்துவ மருத்துவர் இவ்வாறு கூறுகிறார்.
ஒரு குழந்தை டிவி பார்ப்பது அல்லது புத்தகங்களை மிக நெருக்கமாக படிப்பது, தலைவலி, அடிக்கடி கண் சிமிட்டுவது அல்லது அசாதாரணமாக தலை திருப்புவது போன்ற அறிகுறிகளைக் காட்டினால், அவர்கள் விரைவில் சிகிச்சை பெற வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
மேலும், நீரிழிவு அல்லது கிளௌகோமாவின் விளைவுகளால், பார்வைக் குறைபாடு ஏற்படுகிறது.
உலகளவில் சுமார் 128 மில்லியன் மக்கள் பார்வைக் குறைபாடுகளுடன் இருப்பதாக நிபுணர் மேலும் தெரிவித்துள்ளார்.