எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இருந்து தனி வேட்பாளரை முன்வைப்பதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தல்களில் சரத் பொன்சேகா, மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாச ஆகியோருக்கு ஆதரவளித்த போதிலும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தென்னிலங்கையின் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என அவர்கள் ஏற்கனவே தீர்மானித்துள்ளனர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை தெரிவு செய்யும் போது வாக்காளர் அடிப்படை தொடர்பில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானது எனவும் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஏனைய சிறு கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த கட்சிகளுடன் ஏற்கனவே கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளதுடன், கிழக்கு மாகாண முஸ்லிம் அமைப்புகளின் ஜனாதிபதித் தேர்தலில் இணைந்து தனி வேட்பாளரை முன்னிறுத்துவதற்கான ஆயத்தங்கள் இடம்பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.