4000 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான 200 கிலோ கிராமுக்கும் அதிகமான ஹெரோய்னுடன் போதைப்பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் பல நாள் மீன்பிடி படகும் கைப்பற்றப்பட்டுள்ளது. தெய்வேந்திர முனையில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
இலங்கை கடற்படையின் புலனாய்வுப் பிரிவினரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகமும் இணைந்து மேற்கொண்ட ஆழ்கடல் நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடிக் கப்பல் மீன்பிடி துறைமுகத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (22) கொண்டுவரப்பட்டது. படகில் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 200 கிலோ கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றபபட்டுள்ளது என்றும் கடற்படை அறிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.