ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அடுத்த இலக்கான பசுமைப் பொருளாதாரம் என்ற கருத்தை நடைமுறைப்படுத்துவதற்காகவே கெஹலிய ரம்புக்வெல்ல சுற்றாடல் அமைச்சராக நியமிக்கப்பட்டார் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சுற்றாடல் அமைச்சர் என்ற ரீதியில் ரம்புக்வெல்லவுக்கு பாரிய பங்கு இருக்கும் என அமரவீர தெரிவித்தார்.
இன்று (24) காலை பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர், விவசாயம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சை இணைத்தமை மிகவும் நல்ல விடயம் என மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அரசாங்கத்திற்குச் சொந்தமான இரண்டு உர நிறுவனங்களும் ஒன்றிணைந்து ஒரு நிறுவனமாகவும், விவசாயத் திணைக்களம் மற்றும் விவசாய அபிவிருத்தி திணைக்களமும் ஒன்றிணைக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.