நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஐந்து மாவட்டங்களில் உள்ள 46 பிராந்திய செயலக பிரிவுகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், அதில் மூன்று மாவட்டங்களில் உள்ள 13 பிராந்திய செயலக பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
27ஆம் திகதி பிற்பகல் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை அறிவிப்பின் பிரகாரம் பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல பிரதேச செயலகம் மற்றும் எல்பிட்டிய, நயாகம, போபே பொத்தல, அம்பலாங்கொட, தவலம, நெலுவ, யக்கலமுல்ல, அக்மீமன ஆகிய பிரதேச செயலகங்களுக்கு இரண்டாம் நிலை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
காலி மாவட்டத்தில் இகமடுவ, பத்தே., நாகொட மற்றும் காலி கோட்டை பிராந்திய செயலகப் பிரிவுகளில், முதல் நிலை அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பெலியத்த மற்றும் ஒக்வெல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதல் நிலை அறிவிப்பும், வலஸ்முல்ல மற்றும் கட்டுவன பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
மாத்தறை மாவட்டத்தில் பஸ்கொட, கம்புருபிட்டிய, கொட்டபொல, திஹகொட, மாத்தறை கடவத்சதர, அத்துரலிய, பிடபெத்தர, கிரிந்த புஹுல்வெல்ல, முலட்டியன, ஹக்மன, வெலிபிட்டிய, அக்குரஸ்ஸ, மற்றும் மாலிம்படை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதல் நிலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் கஹவத்த, கிரியெல்ல, நிவித்திகல, அயகம மற்றும் பெல்மடுல்ல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதல் பட்டமே அறிவித்தலும், குருவிட்ட, அஹெலியகொட, இரத்தினபுரி, பலாங்கொட, கொலொன்ன, இம்புல்பே, கொடகவெல, அலபத்த, கலவான, ஒபனாய, கலவான, ஓபனகே ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் அதிக மழை பெய்யும் பட்சத்தில் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.