web log free
April 06, 2026

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் சோதனை

நாட்டின் பல மாவட்டங்களில் இன்றும் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக, இராணுவம் தெரிவித்துள்ளது.

முப்படையினரும் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக, பதில் இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன கூறியுள்ளார்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் நேற்றைய தினம் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து முன்னெடுத்த தேடுதலில் 24 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Last modified on Monday, 09 September 2019 02:25
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd