web log free
May 07, 2025

தரம் குறைந்த டீசல் விநியோகம்?

கொழும்பு துறைமுகத்திற்கு நாற்பதாயிரம் மெட்ரிக் தொன் டீசலை கொண்டு வந்த Fos Power என்ற எரிபொருள் தாங்கி கப்பலின் எரிபொருள் மாதிரிகள் தரமானதாக இல்லை என இரண்டு ஆய்வக சோதனை அறிக்கைகள் உறுதிப்படுத்திய போதிலும், கொலன்னாவையில் இருந்து நுகர்வுக்காக விநியோகிப்பதற்கு டீசல் தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரதான பத்திரிகையொன்று வெளிப்படுத்தியுள்ளது. 

சிலோன் இந்தியன் ஒயில் கம்பனியின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த ஆய்வு அறிக்கை ஆய்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LIOC/2023/07ஐக் கொண்ட ஆய்வு அறிக்கை நேற்று முன்தினம் (05) முதலில் எடுக்கப்பட்டது.

அதன் பின்னர் நேற்று (06) எடுக்கப்பட்ட ஆய்வக அறிக்கை தரம் குறைந்ததாக காணப்பட்ட போதிலும், எண்ணெய் விநியோகம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார்.

"Fos Power" கப்பலின் 1p, 1S, 3P, 3S, 5P, 5S டாங்கிகளில் இருந்து ஏற்றப்பட்ட டீசல் மாதிரிகளை ஆய்வு செய்ததில் இது தெரியவந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

நாற்பதாயிரம் தொன்களை சுமந்த இந்தக் கப்பல் ஒக்டோபர் 30ஆம் திகதி சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு நவம்பர் 5ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd