இடைக்கால கிரிக்கெட் குழுவை நியமிக்கும் வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக வாபஸ் பெறுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.
இதன்காரணமாக சர்வதேச கிரிக்கட் பேரவையில் தாக்கம் கூட ஏற்படலாம் என ஜனாதிபதி அங்கு தெரிவித்துள்ளார்.
அங்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, ஜனாதிபதி அவர்களே, என்னால் அதைச் செய்யவே முடியாது, நீங்கள் விரும்பினால் என்னை நீக்குங்கள் என்றார்.
பின்னர் இது தொடர்பில் ஆராய அமைச்சரவை உபகுழுவை நியமிப்பதற்கு ஜனாதிபதி ஏற்பாடு செய்தார்.


