விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தனது அமைச்சின் செயற்பாடுகளின் போது மேற்கொள்ளும் தன்னிச்சையான முடிவுகளை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவதை உடனடியாக நிறுத்துமாறு அமைச்சர்கள் குழுவொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் மிக விரைவில் தீர்மானம் எடுக்கப்படாவிடின் இந்த நாட்டில் கிரிக்கட் மக்களாலும் சர்வதேச சமூகத்தாலும் நிராகரிக்கப்படும் எனவும் அமைச்சர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அமைச்சர் ரொஷான் ரணசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகி வருவதாகவும், கிரிக்கெட் போர்வையில் அரசியல் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருவதாக அவர்கள் அங்கு வலியுறுத்தியுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சருடன் விரைவில் கலந்துரையாடி விளக்கமளிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாகவும் நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.